நான் குறுநில மன்னன்தான்; உன்னால் என்ன செய்ய முடியும்? - பாண்டியராஜனை ஒருமையில் விமர்சித்த ராஜேந்திர பாலாஜி

1 week ago 2

நான் குறுநில மன்னன்தான், என்னை மீறி விருதுநகரில் உன்னால் என்ன செய்ய முடியும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் பாண்டியராஜனை, முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஒருமையில் பேசி விமர்சித்தார்.

சிவகாசியில் நேற்று நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைத்தில் கட்சியின் மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசியதாவது: உச்ச நீதிமன்றத்தில் எனது வழக்கு நிலுவையில் உள்ளது. என் மீது சிபிஐ விசாரணை நடக்கிறது. இவ்வளவு பிரச்சினைக்கு மத்தியிலும் நான் கட்சிப் பணியாற்றி வருகிறேன். நான் நேதாஜி, பிரபாகரன் வரலாற்றைப் படித்து வளர்ந்தவன். எனக்கு பயமே கிடையாது. எம்ஜிஆர், ஜெயலலிதா வழியைப் பின்பற்றி பழனிசாமி தலைமையில் வழிநடப்பவன். வெற்றி பெற்றாலும், தோல்வி அடைந்தாலும் இதே கட்சியில் இருப்பவன்நான்.

Read Entire Article