விக்கிரவாண்டி: விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த வேம்பி மதுரா பூரிகுடிசையில் தமிழ்நாடு பனையேறிகள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் பனை கனவு திருவிழா, ஒருங்கிணைப்பாளர் பாண்டியன் தலைமையில் நேற்று நடைபெற்றது. அப்போது பனையேறிகள் பனங்கள் குடங்களுடன் ஊர்வலமாக வந்து பனைமரத்திற்கு கள் படையலிட்டு பொதுமக்களுக்கு வினியோகம் செய்தனர். இதில் நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசியதாவது: தமிழ்நாட்டின் தேசிய மரம் பனை மரம்தான். கள் குடித்து இறந்தவர்கள் யாரும் இல்லை. நான் படிக்கும்போது கல்லூரி வாசலில் கள் கடை இருந்தது. கல்லூரிக்கு போகும்போது கள் குடித்துவிட்டு செல்வோம். திரும்ப வரும்போது கள் குடிப்போம். அந்த வாழ்கை ராஜ வாழ்கை. ஒருநாள் நானே பனை மரம் ஏறி, கள் இறக்கும் போராட்டத்தை விரைவில் நடத்த இருக்கிறோம். அடுத்தது ஆடு மாடுகளின் மாநாடு தென் மாவட்டம் தேனியை மையப்படுத்தி நடத்த போகிறோம். அப்போதும் ஆடு, மாடுகளின் மனச்சான்றாக உங்கள் முன்பு நானே பேசுவேன். இவ்வாறு அவர் பேசினார்.
ஸ்வீட்டில் பாக் நீக்கம்; சீமான் கிண்டல்: சீமான் நிருபர்களிடம் கூறுகையில், ‘இனிப்பு வகையான மைசூர் பாக், மைசூர் ஸ்ரீ என மாற்றப்பட்டது பைத்தியகாரத்தனம். பாக்கு என்கிறதுல பாக்கிஸ்தான் வருது. அப்ப அவ்வளவு பயமா, அது பாக்கு இல்லை, பாகு மைசூர் பாகு, சர்க்கரை பாகு, வெள்ளை பாகு என்கிறது போல பாகு, அது ஏன் பாக்கு என்கிறதுல பாகிஸ்தான் சொல்றீங்க, இருக்கிறதெல்லாம் மாத்திக்கிட்டே போவீங்களா’ என்றார். தொடர்ந்து, விவசாயிகள் நகை கடன் வாங்குவதில் ஆர்பிஐ மாற்றம் கொண்டுவந்துள்ளby, என கேட்டதற்கு விவசாயிகளை பாதிக்காத எதாவது ஒன்றை அரசு கொண்டு வந்துள்ளதா என சொல்லுங்க, எல்லாமே விவசாயிகளை பாதிக்கிறது. விவசாயிகள் ஏன் வாழுறாங்க என்பது தான் அவர்களுடைய கேள்வி, என்றார்.
The post நானே பனை ஏறி கள் இறக்குவேன் ஆடு, மாடு மாநாடு நடத்த போறேன்: சொல்கிறார் சீமான் appeared first on Dinakaran.