நானியின் "ஹிட் 3" டிரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

1 week ago 6

சென்னை,

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நானி. 'சூர்யாவின் சனிக்கிழமை' படத்தை தொடர்ந்து நானி, 'ஹிட் 3' படத்தில் நடித்து வருகிறார். கே.ஜி.எப் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படத்தை பிரபல இயக்குனர் சைலேஷ் கொலானு இயக்குகிறார்.

இப்படத்தின் முதல் இரண்டு பாகங்கள் பெரிய ஹிட் அடித்ததைத் தொடர்ந்து மூன்றாம் பாகம் தயாராகி வருகிறது. பிரசாந்தி திபிர்னேனி தயாரிப்பில் உருவாகும் இப்படம் வருகிற மே மாதம் 1-ம் தேதி திரைக்கு வருகிறது.

ஏற்கனவே இப்படத்தின் முதல் பாடலான 'காதல் வெல்லுமா' வெளியாகி வைரலானது.

இந்நிலையில் 'ஹிட் 3' படத்தின் டிரெய்லர் வருகிற 14-ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு புதிய போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

We are still vibing to the anthem, and we cannot get over #AbkiBaarArjunSarkaar from #HIT3 ▶️ https://t.co/Qk7NZP5Bhp#HIT3Trailer from April 14th pic.twitter.com/4bRhricAdY

— Unanimous Productions (@UnanimousProds) April 9, 2025
Read Entire Article