
சென்னை,
தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் காமெடி கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வந்தவர் சூரி. பின்னர் வெற்றி மாறன் இயக்கிய 'விடுதலை பாகம் 1' படத்தில் முதல் முறையாக கதாநாயகனாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து, 'கருடன், கொட்டுக்காளி' ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்தார்.
இதற்கிடையில் இவர் விலங்கு வெப் தொடரை இயக்கி புகழ்பெற்ற பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் 'மாமன்' படத்தில் நடித்துள்ளார். ஐஸ்வர்யா லட்சுமி கதாநாயகியாக நடித்துள்ள இப்படம் வருகிற மே 16ம் தேதி திரைக்கு வர உள்ளது.
இதனையடுத்து, மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் சூரி தனது அடுத்த படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தை எல்ரட் குமாரின் ஆர்.எஸ். இன்போ நிறுவனம் தயாரிக்கிறது. இந்நிலையில், இப்படத்தின் டைட்டில் லுக் வெளியாகி உள்ளது. அதன்படி, இப்படத்திற்கு 'மண்டாடி' என பெயரிடப்பட்டுள்ளது. ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் நாளை வெளியாக உள்ளது.