நாட்டுத் துப்பாக்கியால் சிறுத்தை சுட்டுக் கொலை.. பா.ம.க பிரமுகர் உட்பட 3 பேரை கைது செய்த வனத்துறை

3 months ago 25
சேலம் மாவட்டம் கொளத்தூரில் சிறுத்தையை நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற வழக்கில், பா.ம.க. பிரமுகர் உட்பட 3 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். கொளத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமங்களில் 30க்கும் மேற்பட்ட ஆடு, கோழிகளை கொன்ற சிறுத்தை, கடந்த 3 நாட்களுக்கு முன்பு கருங்கரடு பகுதியில் உடலில் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டது. வனத்துறை விசாரணையில், தின்னம்பட்டி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவரும் பா.ம.க. பிரமுகருமான முனுசாமி, தனது நண்பர்கள் சசி, ராஜா ஆகியோருடன் சேர்ந்து சிறுத்தையை சுட்டுக்கொன்றது தெரியவந்தாக கூறிய வனத்துறையினர், மூவரையும் கைது செய்ததுடன், அவர்களிடம் இருந்து நாட்டுத் துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர். 
Read Entire Article