நாட்டுக்கோழி வளர்ப்பு இலவச பயிற்சி: ஆர்வமுள்ளோர் பங்கேற்கலாம்

3 months ago 11

திருச்சி, டிச.2: திருச்சி கால்நடைப் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நாளை (டிச.3) அன்று நடைபெறவுள்ள நாட்டுக்கோழி வளர்ப்பு குறித்த இலவச பயிற்சியில் ஆவர்முள்ளவர்கள் கலந்து கொள்ளலாம் என பயிற்சி மைய பேராசிரியரும் மற்றும் தலைவருமான ஷிபி தாமஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: திருச்சி கொட்டப்பட்டு கோழி பண்ணை சாலையிலுள்ள கால்நடைப் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நாளை (டி.3) அன்று ஒரு நாள் இலவச நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி நடைபெறவுள்ளது. இதில் நாட்டுக்கோழி இனங்கள், தரம் உயர்த்தப்பட்ட நாட்டுக்கோழி இனங்கள், நாட்டுக்கோழி வளர்ப்பு, தீவன மேலாண்மை, சிறிய குஞ்சு பொரிப்பானில் முட்டைகளை பொரித்தல், குஞ்சுகளை பறவைக்கூண்டில் வளர்த்தல், பராமரிப்பு முறைகள், நோய் தடுப்பு முறைகள் ஆகியன குறித்த பயிற்சி அளிக்கப்படும்.

இப்பயிற்சியில் சேர விரும்புவோர் நாளை (டிச.3) காலை 10 மணியளவில் கால்நடைப் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்திற்கு நேரடியாக வருகை தந்து, பயிற்சியில் கலந்துகொள்ளலாம். இதுகுறித்த மேலும் தகவல்களுக்கு இம்மைய தொலைபேசி எண்-0431-2331715ல் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என பேராசிரியரும், தலைவருமான ஷிபி தாமஸ் தெரிவித்துள்ளார்.

The post நாட்டுக்கோழி வளர்ப்பு இலவச பயிற்சி: ஆர்வமுள்ளோர் பங்கேற்கலாம் appeared first on Dinakaran.

Read Entire Article