நீடாமங்கலம், அக். 1: நாட்டு நலத்திட்ட பணிகள் முகாமில் பெருமாள் கோயில் வளாகத்தை மாணவிகள் தூய்மை படுத்தினர். கொரடாச்சேரி அருகே பத்தூர் கிராமத்தில் கொரடாச்சேரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளின் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. நாட்டு நலத்திட்ட பணிகள் முகாமில் பத்தூர் பெருமாள் கோயில் வளாகத்தில் மரக்கன்று நடுதல் கோயிலில் தூய்மை பணியும் நடத்தப்பட்டது. பெண்கள் மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் பூந்தமிழ்பாவை வரவேற்றார்.
முன்னாள் ஒன்றிய குழு துணை தலைவர் வெங்கடேசன், ஒன்றிய குழு துணைத் தலைவர் பாலச்சந்தர், பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர் வெங்கட கிருஷ்ணன், ஊராட்சி தலைவர் சுசீலா, துணைத் தலைவர் கேசவன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை என் எஸ் எஸ் திட்ட அலுவலர் ஜீவா, உதவி திட்ட அலுவலர் இலக்கியா மற்றும் ஆசிரியர்கள் ஆகியோர் செய்திருந்தனர். வரும் 5-ம் தேதி வரை நாட்டு நல பணித் திட்ட முகாம் நடக்கிறது.
The post நாட்டு நலத்திட்ட பணிகள் முகாம்; பெருமாள் கோயில் வளாகத்தில் தூய்மைப்பணி appeared first on Dinakaran.