நாட்டில் உற்பத்தியாகும் காலணிகளில் 38% தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகிறது: பொருளாதார ஆய்வறிக்கையில் பாராட்டு

2 hours ago 1

டெல்லி: நாட்டில் உற்பத்தியாகும் காலணிகளில் 38% தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகிறது என நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த பொருளாதார ஆய்வறிக்கையில் பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது .  இந்தியாவின் காலணி ஏற்றுமதியில் தமிழ்நாடு மட்டும் 47% பங்களிப்பை வழங்குகிறது. காலணி உற்பத்தியில் மட்டுமே 2 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. அண்மைக்காலத்தில் முன்னணி நிறுவன காலணி ஆலைகளை தமிழ்நாட்டில் தொடங்க மாநில அரசு பல முன்னெடுப்புகளை மேற்கொண்டது. தொழிலாளர்கள் எளிதாக வேலைக்கு செல்வதை உறுதி செய்யும் வகையில் கிராமப்புறங்களில் தொழிற்பேட்டைகளை அரசு உருவாக்கி வருகிறது.

தமிழ்நாடு அரசின் நடவடிக்கை NIKE காலணி உற்பத்தி செய்யும் தைவானை சேர்ந்த நிறுவனம் உட்பட வெளிநாட்டு நிறுவனங்களை உள்ளடக்கியது. 2022ல் தமிழ்நாடு அரசு காலணி உற்பத்திக்காக பிரத்யேக கொள்கையை ஒன்றிய அரசு வெளியிட்டது. முதலீடுகளை ஈர்க்க தமிழ்நாடு அரசின் கைடன்ஸ் அமைப்பு தைவான் நாட்டின் பெரு நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளுடன் பேசி வருகிறது. காலணி உற்பத்தியில் தமிழ்நாடு சிறந்து விளங்குவதாக ஒன்றிய அரசின் பொருளாதார ஆய்வறிக்கையில் பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. தோல் காலணிகள் உற்பத்தியில் சிறந்து விளங்கிய தமிழ்நாடு, தற்போது தோல் அல்லாத காலணி உற்பத்தியிலும் முத்திரை பதிக்கிறது. நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கையில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

 

The post நாட்டில் உற்பத்தியாகும் காலணிகளில் 38% தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகிறது: பொருளாதார ஆய்வறிக்கையில் பாராட்டு appeared first on Dinakaran.

Read Entire Article