நாட்டின் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள குழுவை வழிநடத்துவதில் பெருமை: கனிமொழி

4 hours ago 1

சென்னை,

'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை குறித்து உலக நாடுகளுக்கு விளக்க, காங்கிரசின் சசி தரூர், பாஜகவின் ரவிசங்கர், திமுகவின் கனிமொழி, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சுப்ரியா சூலே உள்ளிட்டோர் தலைமையில் 7 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. 7 குழுக்களும் விரைவில் சர்வதேச சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இதுகுறித்து தி.மு.க. எம்.பி., கனிமொழி தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

நமது நாட்டின் பிரதிநிதயாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள குழுவை வழிநடத்துவதில் பெருமைப்படுகிறேன்.நாட்டின் ஒருமைப்பாடு மற்றும் அரசியலமைப்பின் மதிப்புகளை காக்கும் வகையில் திமுக எப்போதும் பாடுபடும்.ஒத்துழைப்பு நல்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பொறுப்பு தந்த பிரதமர் மோடி, அமைச்ர் உள்ளிட்டோருக்கு நன்றி.நாட்டின் நலனை பொறுத்தவரை நாங்கள் ஒற்றுமையாக, உறுதியாக, தெளிவாக, அசைக்க முடியாதவர்களாக நிற்கிறோம்.இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 

Read Entire Article