பெரம்பலூர்,பிப்.1: இந்தியாவில் உயர்கல்வி படித்தவர்களின் எண்ணிக்கையில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. பெரம்பலூர் புத்தக திரு விழாவில் தமிழ்நாடு அரசு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ.கணேசன் என பேசினார். பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம், பெரம்பலூர் மக்கள் பண்பாட்டு மன்றம் மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் இணைந்து ஜன-31 முதல் பிப்-9ஆம்தேதி வரை 10நாட்கள் நடத்தும் 9வது பெரம்பலூர் புத்தகத் திரு விழா நேற்று(31ஆம் தேதி) பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் கிரேஸ் பச்சாவ் தலைமையில், பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ பிரபாகரன்,
பெரம்பலூர் மாவட்ட எஸ்பி ஆதர்ஷ் பசேரா, பெரம்ப லூர் நகராட்சி தலைவர் அம்பிகா ராஜேந்திரன், பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்விக் குழு மங்களின் இயக்குனர் ராஜ பூபதி ஆகியோர் முன்னி லையில் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு போக்கு வரத்து துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் கலந்து கொண்டு சிறப்புரை பேசி னார். இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு தொழிலா ளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச் சர் சி.வெ. கணேசன் பேசிய தாவது:
புத்தகம் வாசிப்பதின் முக்கியத்துவத்தை அனைத்து தரப்பு மக்களி டமும் கொண்டுசேர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில், அனைத்து மாவட்டங்களிலும் புத்தகத் திருவிழாக்களை நடத்த வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட் டுள்ளார். புத்தகம் நம் மன அழுத்தத்தை குறைக்கும். உலக அறிவை வளர்க்கும். உலகத்தில் எத்தனை மொழிகள் இருந்தாலும் யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனி தாவது எங்கும் காணோம் என்பதற்கேற்ப, தமிழ் மொழிக்குத்தான் முக்கி யத்துவம் அதிகம்.
2000 ஆண்டுகளுக்கு முன்பா கவே எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லாத காலத் தில் திருவள்ளுவர் உலகத் தில் எந்த மனிதரும் எழுத முடியாத அசாத்திய வரிக ளை 1,330 திருக்குறள் களை எழுதியுள்ளார். தமிழ்மொழி செம்மொழி என்ற தகுதி பெறுவதற்கு 100 ஆண்டுகளாக பல் வேறு தரப்பினார்கள் போராடியுள்ளனர். முன் னாள் முதலமைச்சர் கருணாநிதி மேற்கொண்ட சீரிய முயற்சியால் தமிழ் மொழிக்கு செம்மொழி என்றத் தகுதிகிடைத்து, உலக அளவில் தமிழ் மொழிக்கு கௌரவத்தை ஏற்படுத்திக் கொடுத்தார்.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் வழியில் செயல்படும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ் நாட்டை ஆறு மண்டலங்க ளாக பிரித்து, ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஏற்ற இலக்கியங்களை கண்ட றிந்து, பல்வேறு விழாக்க ளை நடத்தி வருகிறார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கல்வியின் மீது தனி கவனம் செலுத்தி, பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளதன் காரணமாக, இந்தியாவில் உயர்கல்வி படித்தவர்க ளின் எண்ணிக்கையில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.
மேலும் இந்தியா வில் உள்ள பல்கலைக் கழகங்களில் 32 தலை சிறந்த பல்கலைக் கழகங்கள் தமிழகத்தில் தான் இடம் பெற்றுள்ளது. 43 சதவீதப் பெண்கள் வேலைக்குச் சென்று இந்தியாவிலேயே அதிக மாக பெண்கள் வேலைக்கு செல்லும் மாநிலமாக தமிழ் நாடு திகழ்ந்து வருகிறது. பெண்கள் அதிகம் உயர் கல்வி பயில்வதை ஊக்கு விக்கும் வகையில், அரசு பள்ளியில் 6ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்ற மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ1,000, அதேபோல மாணவர்க ளுக்கு தமிழ் புதல்வன் திட் டத்தின் கீழ் மாதம்தோறும் ரூ1,000, காலை உணவு திட் டம் என பல்வேறு திட்டங் களை அறிவித்து செயல் படுத்தி வருகிறார்.
எனவே தான் இந்தியாவில் உள்ள மாநிலங்கள் எல்லாம் பின் பற்றுகின்ற, ஒரு எடுத்துக் காட்டாக நினைக்கின்ற முதலமைச்சராக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் சிறந்து விளங்கி வரு கிறார். படிப்பு என்பது அனைவருக்கும் அடிப்படை யானது. வாசிக்கும் பழக்க த்தினை அனைவரும் கற் றுக் கொள்ள வேண்டும். மாணவர்கள் அனைவரும் தான் படித்து கற்றுக் கொண்ட விஷயங்களை அப்படியே விட்டு விடாமல் தங்களது வாழ்க்கையிலும் பின்பற்ற வேண்டும் எனத் தெரிவித்தார்.
The post ‘நாட்டின் உயர்கல்வி படித்தவர்களின் எண்ணிக்கையில் தமிழ்நாடு முதலிடம்’ appeared first on Dinakaran.