நாடு முழுவதும் 994 வக்பு சொத்துக்கள் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன: ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜு தகவல்

2 months ago 10

புதுடெல்லி: நாடு முழுவதும் 994 வக்பு சொத்துக்கள் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன என்று ஒன்றிய சிறுபான்மையினர் விவகாரத்துறை அமைச்சர் தெரிவித்தார். ஒன்றிய அரசு வக்பு வாரிய திருத்த சட்டத்தை கொண்டு வர திட்டமிட்டுள்ள நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் நாடாளுமன்ற குழு தலைவர் ஜக்தம்பிகா பால், சர்ச்சைக்குரிய வக்பு சொத்துக்கள் குறித்த விவரங்களை தெரிவிக்கக் கோரி மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதினார். இந்நிலையில் மா.கம்யூ கட்சியின் எம்பி ஜான் பிரிட்டாஸின் கேள்விகளுக்கு நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக பதிலளித்த ஒன்றிய சிறுபான்மையினர் விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, ‘ஒன்றிய அரசுக்கு கிடைக்கப்பெற்ற தகவல்களின்படி, நாடு முழுவதும் 994 வக்பு சொத்துக்கள் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.

அவற்றில் தமிழ்நாட்டில் மட்டும் அதிகபட்சமாக 734 வக்பு சொத்துக்களும், ஆந்திராவில் 152, பஞ்சாபில் 63, உத்தரகாண்ட் 11 மற்றும் ஜம்மு-காஷ்மீரில் 10 சொத்துக்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. வக்பு சட்டத்தின் கீழ் 872,352 அசையா மற்றும் 16,713 அசையா சொத்துக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன’ என்றார். முன்னதாக ஒன்றிய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் அளித்த பதில் ஒன்றில், ‘கடந்த 2019 முதல் வக்பு வாரியத்திற்கு ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் எந்த நிலத்தையும் வழங்கவில்லை; அதுதொடர்பான தரவுகள் இல்லை’ என்று கூறப்பட்டது. இருப்பினும், ’வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்தைப் பொருத்தவரை, கடந்த 2019 முதல் வக்பு வாரியத்திற்கு ஒன்றி அரசு எந்த நிலத்தையும் வழங்கவில்லை’ என்று கூறப்பட்டது.

The post நாடு முழுவதும் 994 வக்பு சொத்துக்கள் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன: ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜு தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article