புதுடெல்லி,அக்.31: ஒன்றிய உள்துறைச் செயலர் கோவிந்த் மோகன், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் உருவாக்கப்பட்ட நாள் விழாவில் பங்கேற்று கூறும்போது, ‘ நாடு முழுவதும் 315 மாவட்டங்களில் உள்ள 2.37 லட்சம் இளம் தன்னார்வலர்களுக்கு பேரிடர் முன்னெச்சரிக்கை மற்றும் முதலில் மீட்புப்பணியில் ஈடுபடுவதற்கான பயிற்சி அளிக்க சிறப்புத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
யுவ அபடா மித்ரா என்ற இந்த திட்டத்தின் கீழ், என்சிசி, நேரு யுவ கேந்திரா சங்கதன், சாரணர்கள், வழிகாட்டிகளில் இருந்து 2,37,326 பேர் தேர்வு செய்யப்பட்டு பயிற்சி வழங்கப்படும். நாடு முழுவதும் 28 மாநிலங்களில் உள்ள 315 மாவட்டங்களில், பேரிடர் தயார்நிலை மற்றும் பதிலளிப்பதில் முதலில் மீட்புப்பணியில் ஈடுபடுவதற்கான இந்தத் திட்டத்தின் கீழ் பயிற்சி அளிக்கப்படும். இது தவிர ‘ஆப்தா மித்ரா திட்டத்தின்’ கீழ் 1,300 பயிற்சியாளர்கள் தயார்படுத்தப்படுவார்கள்’ என்றார்.
The post நாடு முழுவதும் 2.37 லட்சம் தன்னார்வலர்களுக்கு பேரிடர் மீட்புப்பணி பயிற்சி: ஒன்றிய உள்துறை அறிவிப்பு appeared first on Dinakaran.