வாஷிங்டன்: நாடு கடத்தப்பட்ட இந்தியர்களை அமெரிக்க அதிகாரிகள் சங்கிலியால் கட்டிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த இந்தியர்களை அந்நாட்டு அரசு நாடு கடத்தி வருகிறது. நாடு கடத்தப்படும் இந்தியர்களின் கை, கால்களில் விலங்கிட்டு விமானத்தில் இந்தியாவுக்கு அனுப்பிவைக்கப்படுகின்றனர். நாடு கடத்தப்படும் இந்தியர்களுக்கு கை, கால்களில் விலங்கு போட்டதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. அமெரிக்கா சென்ற மோடி, அதிபர் டிரம்ப்பிடம் எதிர்ப்பை பதிவு செய்யவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. கைவிலங்கு விவகாரத்தில் பிரதமர் மோடி மவுனம் காக்கும் நிலையில் அமெரிக்கா அதிர்ச்சி வீடியோவை வெளியிட்டுள்ளது.
The post நாடு கடத்தப்பட்ட இந்தியர்களை அமெரிக்க அதிகாரிகள் சங்கிலியால் கட்டிய வீடியோ வெளியாகி அதிர்ச்சி appeared first on Dinakaran.