![](https://media.dailythanthi.com/h-upload/2025/02/13/39238784-1.webp)
புதுடெல்லி,
கேரள கடலோர மற்றும் வனப்பகுதிகளை சுற்றியுள்ள சமூகங்களை பாதுகாக்கக்கோரி நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் எம்.பி.க்கள் போராட்டம் நடத்தினர்.
இதுகுறித்து வயநாடு எம்.பி. பிரியங்கா காந்தி செய்தியாளர்களுடன் பேசுகையில்,'வயநாட்டில் வனவிலங்குகளால் இதுவரை 7 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இது மிகவும் கவலைக்குரிய ஒரு சூழ்நிலை . இந்த பிரச்சினையை சரிசெய்ய மத்திய அரசும் மாநில அரசும் வயநாடு தொகுதிக்கு நிதி வழங்க வேண்டும். இந்த பிரச்சினையை மக்களவையில் இன்று எழுப்புவேன் என்று நம்புகிறேன்' என்று தெரிவித்துள்ளார்.