நாகை: நாகை மாவட்டத்தில் சிபிசிஎல் விரிவாக்க பணிக்காக நிலம் கையகப்படுத்தப்பட்ட நிலையில் அதற்கு மேல் குடியமர்வு தொகை வழங்கவில்லை என்று கூறி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பனங்குடி பகுதியில் ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனமான சிபிசிஎல் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை செயல்பட்டு வருகிறது. அதனை 31 ஆயிரத்து 500 கோடி ரூபாய் செலவில் விரிவாக்கம் திட்டமிடப்பட்டது. அந்த பணிக்காக பனங்குடி, நரிமனம், கோபுராஜபுரம் உள்ளிட்ட 3 ஊராட்சிகளை சேர்ந்த 570 விவசாயிகளிடம் இருந்து 620 ஏக்கர் விலை நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன.
கடந்த ஆகஸ்ட் 30ம் தேதி நிலம் வழங்கப்பட்ட நிலையில், தற்போது வரை மறுவாழ்வு மற்றும் மேல் குடியமர்வு தொகை வழங்கப்பட வில்லை என்று விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். அதனை கண்டித்து சிபிசிஎல் வளாகம் முன்பு விவசாயிகள் போராட்டம் நடத்தினர். ஆலைக்கு அவரும் லாரிகளை விவசாயிகள் மறித்து நிறுத்தியதால் சாலையோரம் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் நகை டி.எஸ்.பி. பாலகிருஷ்ணன் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
The post நாகையில் சிபிசிஎல் வளாகத்திற்கு முன்பு விவசாயிகள் போராட்டம்: கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கு இழப்பீடு வழங்கவில்லை என புகார் appeared first on Dinakaran.