நாகர்கோவில், பிப்.13 : திருநெல்வேலி ராவணசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் முகைதீன் பிச்சை. இவர் கடந்த இரு நாட்களுக்கு முன் சேலத்தில் இருந்து திருநெல்வேலிக்கு, பெங்களூரு – நாகர்கோவில் விரைவு ரயிலில் பயணித்தார். பி1 பெட்டியில் பயணம் செய்த முகைதீன் பிச்சை, திருநெல்வேலியில் இறங்கி செல்லும் போது தான் கொண்டு வந்திருந்த பேக்கை மறந்து வைத்து விட்டு சென்றார். நீண்ட நேரத்துக்கு பிறகே அவருக்கு பேக் தவறியது நினைவுக்கு வந்தது. உடனடியாக திருநெல்வேலி ரயில்வே போலீசில் புகார் அளித்தார். இதற்கிடையே ரயில் நாகர்கோவில் வந்தது. இதை தொடர்ந்து திருநெல்வேலி போலீசார் நாகர்கோவில் ரயில்வே போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். ரயில்வே போலீசார் சென்று குறிப்பிட்ட அந்த பெட்டியில் சோதனை செய்த போது அதில் ஹேன்ட் பேக் கிடந்தது. உள்ளே இரு செல்போன்களும், ரூ.1000 பணமும் இருந்தது. அதை மீட்டு, முகைதீன் பிச்சையை வரவழைத்து ரயில்வே போலீசார் ஒப்படைத்தனர்.
The post நாகர்கோவில் வந்த ரயிலில் தவற விட்ட செல்போன், பணம் மீட்பு போலீசார் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தனர் appeared first on Dinakaran.