நா.த. கட்சியினரின்அவதூறான, ஆபாசமான பதிவுகளை நீக்கக்கோரி எஸ்.பி வருண்குமார் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு

3 months ago 26
நாம் தமிழர் கட்சியினரின்அவதூறான, ஆபாசமான பதிவுகளை நீக்கக்கோரியும், பதிவுகளை வெளியிட்டவர்கள் தொடர்பான தகவல்களை தருமாறு உத்தரவிடக் கோரியும் திருச்சி எஸ்.பி வருண்குமார் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார். அதில், நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை முருகன் மீது நடவடிக்கை எடுத்ததற்காக தன்னையும்,  புதுக்கோட்டை மாவட்ட எஸ்பியான தன் மனைவி வந்திதா பாண்டேவையும் அக்கட்சியினர் ஆபாசமாக எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிட்டு வருவதாக தெரிவித்துள்ளார். அந்த நபர்களின் எக்ஸ்தள ஐ.டி.களை திருச்சி தில்லைநகர் போலீசார் விசாரணைக்காக கேட்டபோது பெங்களூருவில் உள்ள எக்ஸ் கார்ப்பரேசன் நிறுவனம் தரவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். இதனை விசாரித்த நீதிமன்றம்,  மத்திய அரசு, எக்ஸ் வலைதள பொறுப்பு அதிகாரி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது. 
Read Entire Article