
மதுரை,
திருப்புவனம் அருகே மடப்புரத்தில் உள்ள பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியான அஜித்குமார் நகை திருட்டு புகாரில் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.நகை திருட்டு வழக்கில் அஜித்குமார் சகோதர் நவீனையும் போலீசார் தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில், அஜித்குமாரின் சகோதரர் நவீன்குமாரும் திடீரென உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
போலீசார் தாக்கியதில் காலில் வலி ஏற்பட்டதாக கூறியதால், நவீனை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரது தாய் மாமா கூறினார். மேலும், நலமாக இருப்பதாகவும் கூறினார். மருத்துவர்களின் சிகிச்சைக்குப் பிறகு, சிறிது நேரத்தில் நவீன்குமார் வீடு திரும்பினார்.
நவீன்குமார் சிகிச்சை பெற்று சென்றது தொடர்பாக மதுரை ராஜாஜி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், அஜித்குமாருக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. நவீனுக்கு எக்ஸ்ரே எடுத்ததில் ரத்தக்கட்டு காயம் எதுவும் ஏற்படவில்லை. பாத வலிக்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.