நாகர்கோவில்: கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில் நவராத்திரி விழாவிற்கு புனித நீர் எடுத்துச் செல்வதற்கும், பிற வழிபாடுகளுக்கும் யானை வழங்காததைத் கண்டித்து பக்தர்கள் இரவில் கோயில் முன்பு அமர்ந்து முற்றுகை போராட்டம் நடத்தினர். பக்தர்களுக்கு ஆதரவாக இன்று கன்னியாகுமரியில் வியாபாரிகள் கடைகளை அடைத்து எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில், கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலுக்கு இன்று பிற்பகலில் வனத்துறை குழுவினர் வந்திருந்தனர். அவர்கள் கோயில் வளாகத்திற்குள் இருந்த யானை கட்டும் கூடம், யானைக்கு உணவுகள் தயார் செய்யும் பகுதி ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.