விவசாயிகள் மும்முரம்தர்மபுரி, பிப்.10: தர்மபுரி மாவட்டத்தில், கொள்ளு பயிர் சுமார் 6 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்படுகிறது.மாவட்டத்தில், வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்த நிலையில், கொள்ளு விளைச்சல் அமோகமாக இருந்துள்ளது. இது குறித்து விவசாயிகள் கூறுகையில், ‘நல்ல மழை பெய்ததால், அதிகமாக காய்கள் பிடித்தது. நல்லம்பள்ளி பகுதியில் கொள்ளு விளைச்சல் அதிகரித்துள்ளதால், விவசாயிகள் இயந்திரம் மூலம் அறுவடை பணிகளைத் தொடங்கியுள்ளனர். அறுவடை செய்த கொள்ளு பயிரை இயந்திரத்தில் பணியாளர்கள் கதிரடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நடப்பாண்டில் கொள்ளு விளைச்சல் லாபத்தை கொடுக்கும்,’ என்றனர்.
The post நல்லம்பள்ளியில் கொள்ளு அறுவடையில் appeared first on Dinakaran.