நல்லகண்ணு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்க வந்த பழ.நெடுமாறனை வரவேற்று கைத்தாங்கலாக அழைத்துச்சென்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

2 months ago 8

சென்னை: நல்லகண்ணு நூற்றாண்டு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்க வந்த பழ.நெடுமாறனை கைத்தாங்கலாக அழைத்துச் சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார். முதல்வர் மு.க.ஸ்டாலினை நேற்று அவருடைய முகாம் அலுவலகத்திற்கு உலக தமிழ் பேரமைப்பின் நிறுவனரும் முதுபெரும் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தலைவர் நல்லக்கண்ணு நூற்றாண்டு விழா குழு தலைமை ஒருங்கிணைப்பாளருமான பழ.நெடுமாறன் வருகை தந்தார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியே வந்து பழ.நெடுமாறனை இன்முகத்துடன் வரவேற்று, கைத்தாங்கலாக உள்ளே அழைத்துச் சென்றார். அடுத்தமாதம் 29ம் தேதி, சென்னையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் நல்லகண்ணு நூற்றாண்டு விழா நடைபெறுகிறது என்றும், அவ்விழாவில் முதல்வர் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுமென்றும் அழைப்பு விடுத்தார்.

பழ.நெடுமாறனின் அன்பான அழைப்பை ஏற்று, நிகழ்ச்சியில் பங்கேற்பதாக முதல்வர் உடனடியாக இசைவு தெரிவித்ததுடன், முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா மலரை வழங்கினார். அதன்பின்னர், முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் இருந்து விடைபெற்று புறப்பட்ட பழ.நெடுமாறனை முதல்வர் மீண்டும் கைத்தாங்கலாக வெளியே அழைத்து வந்து அவருடைய காரில் வழியனுப்பி வைத்தார். விழா ஒருங்கிணைப்பு குழு நிர்வாகிகள் த.மணிவண்ணன், வே.வெங்கடேசன் ஆகியோர் உடனிருந்தனர்.

The post நல்லகண்ணு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்க வந்த பழ.நெடுமாறனை வரவேற்று கைத்தாங்கலாக அழைத்துச்சென்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Read Entire Article