சென்னையில் கடும் பனிமூட்டம்: ரயில், விமான சேவைகள் பாதிப்பு: வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி

2 hours ago 1

சென்னை: சென்னையில் கடந்த சில நாட்களாக பனிமூட்டம் குறைந்து காணப்பட்டது. மதிய நேரத்தில் குளிர் குறைந்து வெயில் காணப்பட்டது. ஆனால் இன்று சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகாலை முதலே கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு சென்றனர்.

இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சுற்றுவட்டாரத்தில் கடும் பனிமூட்டம் நிலவுகிறது. இதன் காரணமாக சென்னை மார்க்கத்தில் இயக்கப்படும் ரெயில் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளது. பனிமூட்டத்தால் சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு வரை இயக்கப்படும் புறநகர் மின்சார ரெயில் சேவையிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. சென்னையில் கடும் பனிமூட்டம் காரணமாக வழக்கமான நேர அட்டவணையைக் காட்டிலும் 15 நிமிடம் வரை தாமதமாக புறநகர் மின்சார ரெயில்கள் இயக்கப்படுகிறது.

சென்னையில் திடீர் பனிமூட்டம் காரணமாக சென்னை விமான நிலையத்தில் 25க்கும் மேற்பட்ட விமான சேவைகள் பாதிக்கப்பட்டதால் பயணிகள் கடும் அவதி அடைந்துள்ளனர். சென்னை விமான நிலையத்தில் கடுமையான பனிமூட்டம் காரணமாக, 6 விமானங்கள் சென்னையில் தரையிறந்த முடியாமல், பெங்களூர், திருவனந்தபுரம், ஐதராபாத்துக்கு திருப்பி அனுப்பப்பட்டன.சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய 15க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக புறப்படுகிறது.

 

 

 

 

 

The post சென்னையில் கடும் பனிமூட்டம்: ரயில், விமான சேவைகள் பாதிப்பு: வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி appeared first on Dinakaran.

Read Entire Article