நல்லகண்ணு பல்லாண்டு வாழ்ந்து வழிநடத்த வேண்டும்: பிறந்தநாள் நூற்றாண்டு தொடக்க விழாவில் முதல்வர் வாழ்த்து

3 weeks ago 5

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு, பல்லாண்டு வாழ்ந்து, இளைஞர்களை வழிநடத்தி, அவர்களோடு துணை நிற்க வேண்டும் என்று, அவரது பிறந்தநாள் நூற்றாண்டு தொடக்க விழாவில் முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழா மற்றும் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு பிறந்தநாள் நூற்றாண்டு தொடக்க விழா சென்னை தியாகராய நகரில் உள்ள கட்சியின் மாநில தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று, நல்லகண்ணுவுக்கு பொன்னாடை போர்த்தி, நூல்கள் வழங்கி கவுரவித்தார். விழாவில் முதல்வர் பேசியதாவது: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் நல்லகண்ணுவின் நூற்றாண்டு இன்று தொடங்குகிறது. கலைவாணர் அரங்கில் வரும் 29-ம் தேதி நாள் முழுவதும் நடைபெற உள்ள நூற்றாண்டு விழாவில் அனைத்து கட்சி தலைவர்களும் பங்கேற்று வாழ்த்த உள்ளனர். இதற்காக பழ.நெடுமாறன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

Read Entire Article