
டி.வி. தொடர்களில் நடித்து பின்னர் வெள்ளித்திரைக்கு வந்தவர் வாணி போஜன். இவர் 'ஓ மை கடவுளே', 'லாக்கப்', 'மலேசியா டூ அம்னீசியா', 'மிரள்', 'பாயும் ஒளி நீ எனக்கு', 'லவ்' போன்ற படங்களில் நடித்துள்ளார்.
அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கிக்கொள்ளும் வாணி போஜன், சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் மனம் திறந்தார். அவர் பேசும்போது, "மனதில் இருப்பதை சொல்லுங்கள் என்கிறார்கள். என் மனதில் பட்டதை 'பட்'டென பேசிவிட்டு நிறைய இடங்களில் மாட்டிக்கொண்டு தவிக்கிறேன். இதை மாற்ற முயற்சி செய்து வருகிறேன்.
படங்களில் நடித்துவிட்டு ஓ.டி.டி. வெப் தொடர்களில் நடிப்பதில் எனக்கு ஒன்றும் பிரச்சினை இல்லை. நான் எதையுமே பிரித்து பார்ப்பது கிடையாது. என் கதாபாத்திரத்தை சிறப்பாக செய்வது மட்டுமே என் வேலை. வெப் தொடர்களில் நடிப்பதால் படவாய்ப்பு பறிபோகுமோ என்று பயந்தது கிடையாது. 'சட்னி சாம்பார்' வெப் தொடருக்காக எனக்கு கிடைத்த பாராட்டு அளப்பரியது. நல்ல கதாபாத்திரங்களை நான் 'மிஸ்' செய்யவே மாட்டேன்" என்றார்.