நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்திய விவகாரம் எடப்பாடி பழனிசாமி மீது தயாநிதி மாறன் எம்பி வழக்கு: விசாரணையை வரும் 25ம் தேதிக்கு தள்ளிவைத்தது ஐகோர்ட்

4 hours ago 2

சென்னை: எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக திமுக எம்பி தயாநிதி மாறன் தாக்கல் செய்த அவதூறு வழக்கின் விசாரணையை வரும் 25ம் தேதிக்கு தள்ளிவைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடந்து முடிந்த மக்களவை தேர்தல் பிரசாரத்தின்போது, மத்திய சென்னை திமுக எம்.பி. தயாநிதி மாறன், தொகுதி மேம்பாட்டு நிதியை முறையாக செலவிடவில்லை என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியிருந்தார். இந்த பேச்சுக்கு மறுப்பு தெரிவித்தும், தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாகவும் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தயாநிதி மாறன் அவதூறு வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு, சென்னை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்த நிலையில், வழக்கை ரத்து செய்யக் கோரி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் எடப்பாடி பழனிசாமி மீதான வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.

இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கில் பதில் தர தயாநிதி மாறன் தரப்பில் அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து, விசாரணையை வரும் 25ம் தேதிக்கு தள்ளி வைத்த நீதிபதி, எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான அவதூறு வழக்கின் விசாரணைக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீட்டித்து உத்தரவிட்டார்.

The post நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்திய விவகாரம் எடப்பாடி பழனிசாமி மீது தயாநிதி மாறன் எம்பி வழக்கு: விசாரணையை வரும் 25ம் தேதிக்கு தள்ளிவைத்தது ஐகோர்ட் appeared first on Dinakaran.

Read Entire Article