திருப்பூர்: திருப்பூர் கரைப்புதூர் ஆலையா டையிங் பேக்டரி நிறுவனத்தில் சாயக்கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்ய பனியன் தொழிலாளர்களை எந்தவிதமான பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் ஈடுபடுத்தி உள்ளனர். இதில் தொட்டிக்குள் இறங்கிய ஐந்து பேர் விஷவாயு தாக்கி மயக்கமடைந்தனர்.
அவர்களை திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். இதில் சரவணன், வேணுகோபால் என்ற இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும் 3 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
The post திருப்பூர் அருகே சாய ஆலை கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த 2 பேர் விஷவாயு தாக்கி பலி! appeared first on Dinakaran.