நர்சிங் மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது

5 hours ago 2

வந்தவாசி,

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது மாணவி, தனியார் நர்சிங் கல்லூரியில் படித்து வருகிறார். இவருக்கு திடீரென உடலில் மாற்றம் ஏற்பட்டதால், இவரது தாயார் கடந்த மாதம் 9-ந் தேதி திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அழைத்து சென்றார். அப்போது, மாணவி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

இதைக்கேட்டு சிறுமியின் தாய் அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் சார்பில் வந்தவாசி அனைத்து மகளிர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், சப்-இன்ஸ்பெக்டர் விசாரணை நடத்தினார். அதில், கொடநல்லூர் கிராமத்தை சேர்ந்த மதியரசன் (வயது 20) என்பவர், திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி மாணவியுடன் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது.

கடந்த ஒரு மாதமாக தலைமறைவாக இருந்த மதியரசனை சப்-இன்ஸ்பெக்டர் சாந்தி தலைமையிலான போலீசார் கைது செய்தனர். பின்னர் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

 

Read Entire Article