கிருஷ்ணகிரி: சாமிக்கு ஏற்றிய விளக்கால் நடந்த விபரீதம்... கொழுந்து விட்டு எரிந்த வீடு

4 hours ago 1

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் கோகுல் நகர் பகுதியில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் மணி (52 வயது). தள்ளுவண்டி வியாபாரி. இவரது மனைவி காளியம்மாள். இவர்களுக்கு ஜீவா மற்றும் மணிகண்டன் என்ற 2 மகன்கள் உள்ளனர். நேற்று, மணி தனது மனைவியுடன் வியாபாரத்திற்கு சென்று விட்டார். மகன்களும் வெளியே சென்று விட்டனர்.

இந்த நிலையில் மணி வீட்டில் மதியம் திடீரென தீப்பிடித்து புகை வந்தது. இதைக் கண்ட அக்கம், பக்கத்தினர் மணிக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அவர் விரைந்து வந்து வீட்டில் தீப்பிடித்து எரிவதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த தீ விபத்தில், வீட்டில் இருந்த பிரிட்ஜ், வாஷிங் மெஷின் உள்ளிட்ட வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் தீயில் எரிந்து கருகி சேதமடைந்தன. விசாரணையில் வீட்டில் சாமிக்கு ஏற்றி வைத்து இருந்த விளக்கு காற்றடித்து கீழே விழுந்து தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. இது குறித்து ஓசூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read Entire Article