சென்னை: இன்னுயிர் காப்போம் நம்மைக் காக்கும் 48 திட்டம் மூலம் 3.57 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர் என்று தமிழக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சாலை விபத்துகளில் சிக்கியவர்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. அந்த திட்டம் தமிழகத்தில் ஏற்கெனவே நடைமுறையில் உள்ளது.
இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது: இன்னுயிர் காப்போம் நம்மைக் காக்கும் 48 திட்டம் கடந்த 2021 டிசம்பர் 18-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலினால் தொடங்கிவைக்கப்பட்டது. சாலை விபத்துகளில் சிக்கியவர்களை உடனடியாக மீட்டு, அவர்களைக் காப்பாற்றுவதே இதன் நோக்கம்.