நந்தியம்பாக்கம் ஊராட்சியில் மழைநீரை அகற்றும் பணி

1 month ago 5

பொன்னேரி: பொன்னேரி தொகுதி மீஞ்சூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட நந்தியம்பாக்கம் ஊராட்சியில் நேற்று முன்தினம் பெய்த கனமழையால் மீஞ்சூர் பேரூராட்சி பகுதியில் இருந்து ரயில்வே மேம்பாலம் வழியாக நந்தியம்பாக்கம் ஊராட்சி கொங்கி அம்மன் நகர், நேதாஜி நகர், ஆதிலட்சுமி நகர் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி குடியிருப்புகளை சூழ்ந்துள்ளது. தகவல் அறிந்ததும் மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலர் நடராஜ், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் லோகநாதன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர். உடனடியாக ஊராட்சிமன்ற தலைவர் கலாவதி மற்றும் வார்டு உறுப்பினர் வள்ளி வில்வநாதன் ஆகியோர் பொக்லைன் மூலம் தண்ணீரை வெளியேற்றும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

The post நந்தியம்பாக்கம் ஊராட்சியில் மழைநீரை அகற்றும் பணி appeared first on Dinakaran.

Read Entire Article