நத்தம் அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கை துவக்கம்

3 hours ago 2

 

நத்தம், மே 10: நத்தத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி துவங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டு 2025- 2026ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் அதிலுள்ள பாடப்பிரிவுகள் குறித்தும் தகவல் வெளியாகியுள்ளது. இதையொட்டி நத்தம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அந்த கல்லூரி தற்காலிகமாக செயல்பட உள்ளது.இக்கல்லூரி இருபாலர் (Co-Education) மாணவர் கல்லூரியாக செயல்பட உள்ளது.

இதில் ஆங்கில வழியில் பயிலும் வகையில் இளங்கலை கணினி அறிவியல் பிரிவில் 50 இடமும், இளங்கலை தரவு அறிவியல் பிரிவில் 50 இடமும், இளங்கலை வணிகவியல் பொது பிரிவில் 60 இடமும், இளங்கலை தொழில் நிர்வாக பிரிவில் 60 இடமும், இளங்கலை தமிழ் வழியில் வரலாறு பாடப்பிரிவில் 60 இடம் என மொத்தம் 280 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இக்கல்லூரியில் மேற்கண்ட பாடப்பிரிவுகளில் சேர விரும்புபவர்கள் ஆன்லைன் மூலம் பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post நத்தம் அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கை துவக்கம் appeared first on Dinakaran.

Read Entire Article