நண்பர்களுடன் நடனம் ஆடிய மணமகன்! திருமணத்தை நிறுத்திய பெண்ணின் தந்தை

2 hours ago 1

டெல்லியில் ஒரு ஜோடிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு, அதற்கான வரவேற்பு விழா நடைபெற்றுள்ளது. அப்போது மேடையில் நின்றிருந்த மணமகனை, அவரது நண்பர்கள் 'சோலி கே பீச்சே க்யா ஹை' என்ற பாடலுக்கு நடனம் ஆடச் சொல்லி வற்புறுத்தியுள்ளனர். திருமண நிகழ்ச்சியில் நண்பர்கள் வற்புறுத்தி கேட்பதால், நண்பர்களின் கோரிக்கையை ஏற்ற மாப்பிள்ளை, அவர்களுடன் இணைந்து நடனம் ஆடியுள்ளார். இதனை பார்த்த மணமகளின் தந்தை கோபம் அடைந்து திருமணத்தையே நிறுத்தியுள்ளார்.

"மணமகனின் இந்தச் செயல் எனது குடும்பத்தின் மதிப்பை அவமதிப்பதாக இருக்கிறது" எனக் கூறி தனது மகளை அழைத்துக் கொண்டு வெளியேறி இருக்கிறார். நண்பர்களுடன் இணைந்து நடனம் ஆடியதற்காக, மணமகனின் திருமணம் நின்றுபோன செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுதொடர்பாக பயனர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றன.

Read Entire Article