நண்பர் ரஜினிகாந்த் விரைவில் பூரண குணமடைய பிரார்த்திக்கிறேன் - சந்திரபாபு நாயுடு

3 months ago 28

ஆந்திரா,

நடிகர் ரஜினிகாந்த், உடல்நலக்குறைவு காரணமாக நேற்றிரவு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவர் விரைவில் உடல்நலம் பெற வேண்டுமென திரை, அரசியல் பிரபலங்கள் சமூக வலைதளங்கள் மூலமாக தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், ரஜினிகாந்த் விரைவில் பூரண குணம் பெற வேண்டும் என ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "எனது நண்பரும், சூப்பர்ஸ்டாருமான ரஜினிகாந்த் விரைவில் முழுமையாக குணமடைய வாழ்த்துகிறேன். அவரது உடல்நலம் மற்றும் நீண்ட ஆயுளுக்காக பிரார்த்திக்கிறேன்" என்று அதில் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.


Wishing my friend, superstar @rajinikanth a speedy and full recovery. I pray for his health and longevity.

— N Chandrababu Naidu (@ncbn) October 1, 2024

Read Entire Article