திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த தண்ணீர்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. இதில், தலைமை ஆசிரியர் வள்ளியம்மாள் தலைமை தாங்கினார். மேலாண்மைக்குழு துணைத் தலைவி கனிமொழி, பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் மகேஸ்வரி, ஆனந்தி, பிரியா, காயத்ரி, அருள்பிரகாசி, ஜெயஸ்ரீ, சோனியா, செல்வி, கார்த்திகா, தேவி, ரங்கநாயகி, எஸ்.தேவி, கல்வியாளர் சுப்புலட்சுமி, கௌதமன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியர்கள் ஜெயந்தி, சரோஜினி ஆகியோர் வரவேற்றனர்.
திருவள்ளூர் வட்டாரக் கல்வி அலுவலர் வீரராகவன், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர்கள் தயாளன், தேவிகா தயாளன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கினர். இந்த விழாவை முன்னிட்டு மாணவ மாணவிகளின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் முரளி, ராஜன், மகேந்திரன், அருண், மார்ட்டின், அமலநாதன் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
The post நடுநிலைப்பள்ளி ஆண்டு விழா: சிறந்த மாணவர்களுக்கு பரிசு appeared first on Dinakaran.