நடுக்கடலில் இயந்திர கோளாறு கடலில் சிக்கி தவித்த 4 மீனவர்கள் மீட்பு

1 month ago 6

தவளக்குப்பம், டிச. 12: இயந்திர கோளாறால் நடுக்கடலில் சிக்கி தவித்த 4 மீனவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டு இருந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக மாறியுள்ளது. இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து இலங்கை கடற்பகுதியை நோக்கி நகர்ந்து வருவதால், தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதனிடையில் கடலோர மாவட்டங்களில் பலத்து காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடிக்க வேண்டாம் என புதுச்சேரி மீனவளத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில் நல்லவாடு மீனவ கிராமத்தை சேர்ந்த மேகநாதன் என்பவரின் படகில் நல்லவாடு பகுதியை சேர்ந்த மதியழகன், ஐயனாரப்பன், நாகலிங்கம் ஆகியோர் நேற்று மீன்பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர். அப்போது அவர்களுடைய படகின் இன்ஜின் பனித்திட்டு -நரம்ைப இடைப்பட்ட பகுதியில் பழுதடைந்ததால் நடுக்கடலில் தத்தளித்து வருவதாக உறவினர்களுக்கு தொலைபேசியில் தகவல் தெரிவித்தனர்.

இத்தகவலை மீனவர்களின் குடும்பத்தினர், புதுச்சேரி மரைன் போலீசிடம் இதுபற்றி தெரிவித்தனர். அப்போது மரைன் போலீசின் மீட்பு படகு சீரமைக்கும் பணியில் இருப்பதாக கூறினர். இதனையடுத்து இந்திய கடலோர காவல் படையினரிடம் படகுமூலம் மீட்டு தருமாறு மீனவர்கள் கோரிக்கை வைத்தனர். அப்போது அவர்கள் முறையாக கடிதம் எழுதி தரும்படி கேட்டுள்ளதாக தெரிகிறது. இதில் கோபமடைந்த மீனவர்கள், தங்கள் உதவி தேவையில்லை, நாங்களே மற்றொரு படகில் மீட்டு வருகிறோம் எனக்கூறிவிட்டு சென்றுவிட்டனர். பின்னர் விமல், குணசேகரன், பிரசாத், தனபால் ஆகியோர் மற்றொரு படகில் கடலுக்குள் சென்று, கடலில் தத்தளித்தவர்களையும், படகையும் மீட்டு பத்திரமாக கரைக்கு அழைத்து வந்தனர்.

The post நடுக்கடலில் இயந்திர கோளாறு கடலில் சிக்கி தவித்த 4 மீனவர்கள் மீட்பு appeared first on Dinakaran.

Read Entire Article