நடிகையிடம் மன்னிப்பு கேட்ட 'குட் பேட் அக்லி' பட நடிகர்

3 hours ago 4

கொச்சி,

பிரபல மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ. இவர் தமிழில் 'பீஸ்ட், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' ஆகிய படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான 'குட் பேட் அக்லி' திரைப்படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

சமீபத்தில் இவர் மீது மலையாள நடிகை வின்சி அலோசியஸ் பரபரப்பு குற்றச்சாட்டு முன்வைத்து இருந்தார். சூத்ரவாக்கியம் படத்தின் படப்பிடிப்பின்போது, ஷைன் டாம் ஷாக்கோ போதையில் தன்னிடம் தகாத முறையில் நடந்துகொண்டதாக மலையாள  வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதனை தொடர்ந்து ஷைன் டாம் சாக்கோ போதை பொருள் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளிவந்தார்.

இந்த நிலையில் நடிகர் ஷைன் டாம் சாக்கோ நடிகை வின்சி அலோசியஸிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். அதாவது, நடிகர் சங்கத்தில் "நான் எந்தவித உள் நோக்கத்துடனும் அப்படி பேசவில்லை. என்னுடைய இயல்பான பேசும் பாணியே அப்படித்தான். ஆனால் இனிமேல் இதுபோன்று நடக்காமல் நான் பார்த்துக் கொள்வேன்" என்று கூறியுள்ளார். நடிகை வின்சி அலோசியஸ் காவல்துறைக்கு செல்லாததால் நடிகர் சங்கத்திலேயே அவரது குற்றச்சாட்டுக்கு  தீர்வு காணப்படும் என்ற தகவல் கிடைத்துள்ளது.

#JUSTIN || நடிகையிடம் அத்துமீறியதாக எழுந்த புகாரில் நடிகர் ஷைன் டாம் சாக்கோ மன்னிப்பு கேட்டதாக தகவல்நடிகை காவல்துறைக்கு செல்லாததால் நடிகர் சங்கத்திலேயே பேசி தீர்வு காணப்படும் என தகவல்ஷைன் டாம் சாக்கோ மீது போலீசார் போதைப்பொருள் பயன்படுத்தியதாக பதிந்துள்ள வழக்கு விசாரணை தொடரும்… pic.twitter.com/SX5WtCIXmq

— Thanthi TV (@ThanthiTV) April 24, 2025
Read Entire Article