நடிகை லாவண்யா திரிபாதியின் புதிய படத்திற்கு கமல்ஹாசன் படத்தலைப்பு

4 weeks ago 6

சென்னை,

தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்துள்ள லாவண்யா திரிபாதி, தமிழில் 'பிரம்மன்' படத்தில் சசிகுமார் ஜோடியாக நடித்து பிரபலமானார். அதனைத்தொடர்ந்து 'மாயவன்', 'தணல்' உள்ளிட்ட படங்களில் நடித்தார். கடந்த மாதம் லாவண்யா திரிபாதிக்கும், தெலுங்கு முன்னணி நடிகர் சிரஞ்சீவியின் சகோதரர் நாகபாபுவின் மகனும் நடிகருமான வருண் தேஜுக்கும் திருமணம் நடந்தது.

இந்த சூழலில், லாவண்யா திரிபாதி நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, தாதினேனி சத்யா இயக்கும் இப்படத்திற்கு 'சதிலீலாவதி' எனப்பெயரிடப்பட்டுள்ளது. இது குறித்து, நடிகை லாவண்யா திரிபாதி தனது சமூகவலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

'இந்த படத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் மிகவும் உற்சாகமாக உள்ளது. இப்படத்தின் கதை என் கவனத்தை மிகவும் ஈர்த்தது. இது அடுத்த ஆண்டை அற்புதமாக தொடங்க ஒரு அருமையான வழி' இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கடந்த 1995-ம் ஆண்டு கமல்ஹாசன், கோவை சரளா, கல்பணா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் 'சதிலீலாவதி' என்பது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article