நடிகை ரம்யா பாண்டியன் வருங்கால கணவருடன் வெளியிட்ட வீடியோ...!

2 months ago 13

சென்னை,

நடிகை ரம்யா பாண்டியன் 'ஜோக்கர்' படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அப்படம் தேசிய விருது வென்றதோடு, அதில் நடித்த ரம்யா பாண்டியனின் நடிப்புக்கும் பாராட்டுக்கள் கிடைத்தன. 'டம்மி பட்டாசு', சமுத்திரக்கனியின் 'ஆண் தேவதை' ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். அதையடுத்து குக் வித் கோமாளி சீசன் 1, பிக்பாஸ் சீசன் 4 ஆகிய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

இந்நிகழ்ச்சிகள் மூலம் அவரது ரசிகர் வட்டம் பெரிதானது. சூர்யா தயாரித்த 'ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்' என்கிற படத்தில் கிராமத்து நாயகியாக நடித்து அசத்தி இருந்தார். அதன்பின்னர் அடுத்தடுத்து பிசியாக நடித்து வரும் ரம்யா பாண்டியன், இன்ஸ்டாவிலும் அவ்வப்போது புகைப்படங்களை பதிவிட்ட வண்ணம் உள்ளார். 

இந்தநிலையில், நடிகை ரம்யா பாண்டியனுக்கு திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியானது. அதன்படி, இவருக்கும் யோகா மாஸ்டர் லவ்ல் தவானுக்கும் அடுத்த மாதம் திருமணம் நடைபெற உள்ளதாக கூறப்பட்டு வருகிறது. இருவரும் காதலித்து வருவதாக கூறப்படும் நிலையில், தற்போது நடிகை ரம்யா பாண்டியன் வருங்கால கணவருடன் எடுத்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனால் இவர்கள் இருவருக்கும் திருமணம் நடைபெறுவது உறுதியாகி உள்ளது.

Read Entire Article