![](https://media.dailythanthi.com/h-upload/2025/02/02/37064100-poo.webp)
சென்னை,
பவர் ஸ்டார் பவன் கல்யாண் தற்போது ஹரி ஹர வீர மல்லு என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். கிரிஷ் மற்றும் ஜோதி கிருஷ்ணா இயக்கி உள்ள இந்த படத்திற்கு கீரவாணி இசை அமைத்திருக்கிறார். இப்படத்தில் கதாநாயகியாக நிதி அகர்வால் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னட மொழியில் ஒரு பான் இந்தியா படமாக இப்படம் வருகிற மார்ச் மாதம் 28-ம் தேதி வெளியாக உள்ளது.
நிதி அகர்வால் படத்தின் முக்கிய கதாநாயகியாக இருந்தாலும், கூடுதல் பெண் நடிகைகளில் பூஜிதா பொன்னடா, நர்கிஸ் பக்ரி மற்றும் நோரா பதேஹி ஆகியோர் உள்ளனர்.
பூஜிதா பொன்னடா பல தெலுங்கு படங்களில் நடித்திருந்தாலும், அவர் இன்னும் முன்னணி நடிகை என்ற கட்டத்திற்கு செல்லவில்லை. இதனால், இப்படம் இவருக்கு கைக்கொடுக்கும் என்று நம்பப்படுகிறது.