நடிகை சமந்தாவை சுற்றும் காதல் வதந்தி குறித்து மேலாளர் விளக்கம்

10 hours ago 1

சென்னை,

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை சமந்தா. இவர் கடந்த 2010ம் ஆண்டு திரைக்கு வந்த 'விண்ணைதாண்டி வருவாயா' படம் மூலமாக சினிமாவில் அறிமுகமானவர். அதனை தொடர்ந்து 'பானா காத்தாடி, நீதானே பொன் வசந்தம், அஞ்சான்' என பல படங்களில் நடித்து பிரபலமானார்.அதனை தொடர்ந்து தெலுங்கு படங்களிலும் நடித்து வந்தார் சமந்தா. ஆனால் அவர் எதிர்பார்த்த வெற்றியை அவருக்கு கிடைக்காமலே இருந்தது. அந்த சமயத்தில் 2014-ம் ஆண்டு ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவான கத்தி படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.இந்த படம் அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. அதனை தொடர்ந்து, விஜய்யுடன் இணைந்து 'தெறி, மெர்சல்' என சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தார்.

கடைசியாக தமிழ் சினிமாவில் காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களில் நடித்தார். இந்த படத்திற்கு பிறகு தமிழில் போதுமான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இருந்த போதிலும் சாகுந்தலம் மற்றும் குஷி ஆகிய தெலுங்கு படங்களில் நடித்தார். இந்த 2 படங்களுமெ போதுமான ரீச் கொடுக்கவில்லை. அப்பாவின் மறைவு, மயோசிடிஸ் நோய் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அதிலிருந்து மீண்டு வந்துள்ளார்.

சமந்தா அண்மையில் சுபம் என்கிற படத்தை தயாரித்து இருந்தார். அப்படம் கடந்த மே 9-ந் தேதி திரைக்கு வந்தது. இதனிடையே சமந்தாவும், ராஜும் மும்பையில் வீடு ஒன்றை பார்த்து வருவதாகவும், விரைவில் இருவரும் ஜோடியாக மும்பையில் குடியேற இருப்பதாகவும் செய்திகள் உலா வந்தன.

ராஜ் நிதிமோருவின் மனைவி ஷியாமளியும் இந்த உறவு குறித்து மறைமுகமாக பதிலளித்துள்ளார். "என்னைப் பற்றி நினைப்பவர்களுக்கு, பார்ப்பவர்களுக்கு, கேட்பவர்களுக்கு, பேசுபவர்களுக்கு, எழுதுபவர்களுக்கு, சந்திப்பவர்களுக்கு அன்புடன் வாழ்த்துகிறேன்" என்று அவர் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்தது வைரல் ஆனது. இதனால் சமந்தா - ராஜ் நிதிமோருவின் காதல் விவகாரம் தென்னிந்திய திரையுலகில் பரபரப்பாக பேசப்பட்டது.

இந்த நிலையில், சமந்தாவின் மேனேஜர் அவரைப்பற்றிய காதல் வதந்திகள் பற்றி முதன்முறையாக பதிலளித்து உள்ளார். அதன்படி சமந்தாவை பற்றிய காதல் வதந்திகள் எதுவும் உண்மையில்லை என்று கூறியுள்ளார். சமந்தா நாக சைதன்யாவை விவாகரத்து செய்த பின்னர் இனி திருமணமே செய்துகொள்ள மாட்டேன் என கூறி இருந்தார். ஆனால் அவரின் சமீபத்திய செயல்கள் சர்ச்சையில் சிக்கிய நிலையில், அவரின் மேனேஜர் அந்த காதல் விவகாரத்தை திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

#JUSTIN || Samantha || நடிகை சமந்தாவை சுற்றும் காதல் வதந்தி - உண்மை என்ன? மேலாளர் விளக்கம்https://t.co/oB2W0o6xvF#samantha #kollywood #bollywood #tamilactresss #thanthitv

— Thanthi TV (@ThanthiTV) May 16, 2025
Read Entire Article