நடிகை சமந்தா குறித்த சர்ச்சைக்கு மத்தியில் பிரியாணி இருந்தால் ‘பீர்’ இருக்கணும்!: தெலங்கானா பெண் அமைச்சரின் வீடியோ வைரல்

2 months ago 12

ஐதராபாத்: நடிகை சமந்தா – நடிகர் நாகசைதன்யா விவாகரத்து குறித்து பேசி சர்ச்சையில் சிக்கிய தெலங்கானா மாநில வனத்துறை அமைச்சர் கொண்டா சுரேகா, தற்போது மீண்டும் புதிய சர்ச்சை ஒன்றில் சிக்கியுள்ளார். குடும்ப உறவினர்களுடன் இன்ஸ்டாகிராம் லைவில் பேசிய சுரேகா, ‘இன்று நமக்கு பண்டிகை நாள் என்பதால் அதிகமாக டான்ஸ் ஆடுபவர்களுக்கு அதிக பிரியாணி வழங்கப்படும்’ என கூறுகிறார்.

அப்போது எதிரில் இருந்து பேசிய இவரது உறவுக்கார பெண் ஒருவர், ‘மது ஆறாக ஓட வேண்டும் அல்லவா?’ என கேட்கிறார். அவருக்கு பதிலளிக்கும் விதமாக பேசிய சுரேகா, ‘பிரியாணி இருந்தால் பீர் இருக்க வேண்டும்; அதிகம் டான்ஸ் ஆடுபவர்களுக்கு அதிக பீர் வாங்கி கொடுக்கப்படும்; பிரியாணியுடன் பீர் வழங்கப்படும் என்று நான் உறுதி அளித்திருக்கிறேன்’ என்று சுரேகா கூறுகிறார். அப்போது இடையில் புகுந்த மற்றொரு பெண், ‘பிரியாணி இருக்கும்போது பீர் இருக்கக் கூடாதா? வாரங்கல்லில் சுரேகாவின் கணவர் மதுவை ஆறுபோல் ஓட விடுகிறார்; சுரேகாவும் இங்கு அதுபோல் செய்வார்; நாமும் மதுவை குடிக்கக் கற்றுக் கொண்டால் சோர்வு வராது’ என்று கூறுகிறார். தற்போது இந்த இன்ஸ்டாகிராம் லைவ் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

The post நடிகை சமந்தா குறித்த சர்ச்சைக்கு மத்தியில் பிரியாணி இருந்தால் ‘பீர்’ இருக்கணும்!: தெலங்கானா பெண் அமைச்சரின் வீடியோ வைரல் appeared first on Dinakaran.

Read Entire Article