
சென்னை,
மலையாளத்தில் பல திரைப்படங்களில் நடித்திருப்பவர் அஞ்சலி நாயர். நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் இவர், தமிழில் ''எண்ணி துணிக'', ''காலங்களில் அவள் வசந்தம்'', ''நெடுநல்வாடை'', ''டாணாக்காரன்'' உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில், மற்றொரு தமிழ் படம் ஒன்றில் அஞ்சலி நாயர் நடித்து வருகிறார். ''பெழுந்தா' எனப்பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை பரத்மோகன் இயக்குகிறார். சாந்தனு கதாநாயகனாக நடிக்கிறார்.
மேலும், படவா கோபி, ஆர்.ஜே. ஆனந்தி, பகீஸ் மற்றும் பலர் நடிக்கின்றனர். தாண் குமார் படத்திற்கு இசை தில் அமைக்கிறார், பல்லு ஒளிப்பதிவு செய்கிறார்.