சென்னை: போதைப்பொருள் விவகாரத்தில் நடிகர்கள் ஸ்ரீ காந்த், கிருஷ்ணாவை தொடர்ந்து மேலும் ஒரு நபரை போலீசார் நேற்று கைது செய்தனர். அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் மற்றும் அவரது கும்பலிடம் இருந்து போதை பொருள் வாங்கி பயன்படுத்திய வழக்கில் நடிகர்கள் ஸ்ரீ காந்த் மற்றும் கிருஷ்ணா ஆகிய இருவரும் நுங்கம்பாக்கம் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
நடிகர்களுக்கு போதை பொருள் சப்ளை செய்த பிரசாத், பிரதீப் குமார், கானா நாட்டைச் சேர்ந்த ஜான், கெவின் ஆகிய நான்கு பேரையும் போலீசார் காவவில் எடுத்து விசாரணை செய்ய எழும்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இதையடுத்து 6 நாட்கள் போலீஸ் காவல் வழங்கி உத்தரவிட்டார். அ தன் அடிப்படையில் 4 பேரையும் நுங்கம்பாக்கம் காவல் நிலையம் அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்கள் மூலம் வேறு யாருக்கெல்லாம் போதை பொருள் சப்ளை செய்யப்பட்டுள்ளது, ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள இரண்டு நடிகர்கள் தவிர வேறு யாருக்காவது திரைத்துறையில் இவர்கள் போதைப்பொருள் சப்ளை செய்துள்ளார்களா, இந்த போதைப்பொருள் கும்பலின் பின்னணி என்ன என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் இவர்களுடன் தொடர்புடைய நைஜீரிய நாட்டு நபர்களை நுங்கம்பாக்கம் தனிபடை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்நிலையில் இவர்களிடம் தொடர் விசாரணை மேற்கொண்டதில் தலைமறைவாக இருந்த ராயப்பேட்டையை பகுதியை சேர்ந்த பயாஸ் ஷமேட் (31) என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து ஒரு செல்போன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
The post நடிகர்கள் ஸ்ரீ காந்த், கிருஷ்ணாவை தொடர்ந்து போதைப்பொருள் விவகாரத்தில் மேலும் ஒருவர் கைது appeared first on Dinakaran.