நடிகர் விஷால் குறித்து அவதூறு: யூடியூபர் மற்றும் யூடியூப் சேனல்கள் மீது வழக்குப்பதிவு!

4 hours ago 1

சென்னை,

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஷால். செல்லமே திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகம் ஆன இவர் சண்டக்கோழி, தாமிரபரணி என பல அதிரடி ஹிட் படங்களை கொடுத்து டாப் நடிகளில் ஒருவராக உள்ளார். நடிகர் சங்க பொதுச்செயலாளராகவும் இருக்கும் விஷால் படு ஆக்டிவாக இயங்க கூடியவர்.

சமீபத்தில் விஷால் நடித்து வெளியான மதகஜராஜா திரைப்பட வெளியீட்டின்போது நடிகர் விஷாலுக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டு மேடையில் தோன்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் யூடியூபர் சேகுவாரா என்பவர், "நடிகர் விஷால் மதுபழக்கத்திற்கு அடிமையானதால் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு கைகால் நடுக்கம் ஏற்பட்டதாக" யூடியூப் சேனல்களில் பேட்டியளித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், யூடியூபர் சேகுவாரா மற்றும் அவரது பேட்டியை ஒளிபரப்பிய யூடியூப் சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்க தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் நடிகரும் தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவருமான நாசர் புகார் அளித்தார். நடிகர் நாசர் அளித்த புகாரின் அடிப்படையில், யூடியூப்பர் சேகுவேரா மீதும், 2 யூடியூப் சேனல்கள் மீதும் தேனாம்பேட்டை போலீசார் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கடந்த 12-ம் தேதி விஷால் நடிப்பில் வெளியான மதகஜராஜா படத்தின் நிகழ்ச்சி ஒன்றில் விஷால் பேசுகையில், அவரது கை நடுங்கியது இதனால் இணையத்தில் பல வதந்திகள் பரவின என்பது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article