சென்னை: நடிகர் ரவி மோகன், ஆர்த்தியின் விவாகரத்து வழக்கு குறித்து சமூக வலைதளங்களில் ரசிகர்கள் தீவிரமாக விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள். தங்கள் வாழ்க்கையில் மூன்றாவது நபர் வந்ததால் பிரச்னை ஏற்பட்டதாக ஆர்த்தி தெரிவித்துள்ளார். இதையடுத்து ஆர்த்தியின் வாழ்க்கையை கெடுத்த அந்த மூன்றாவது நபர் பாடகியும், தெரபிஸ்ட்டுமான கெனிஷா பிரான்சிஸ் தான் என சினிமா ரசிகர்கள் அவரை கடுமையாக தாக்கி சமூக வலைத்தளங்களில் கருத்துகளை வெளியிட்டு வருகிறார்கள். இது குறித்து இன்ஸ்டா ஸ்டோரியில் கெனிஷா பிரான்சிஸ் கூறியிருப்பதாவது: நான் கமெண்ட்ஸை ஆஃப் செய்து வைக்கவும் மாட்டேன்.
எங்கும் ஓடவும் மாட்டேன். மறைப்பதற்கு எதுவும் இல்லை. என் செயல்களை கேள்வி கேட்கும் உரிமை உங்களுக்கு இருக்கிறது. ஆனால் அதை என் முகத்திற்கு நேராக கேளுங்கள். உங்கள் அனைவருக்கும் என் பக்க உண்மையை சொல்ல தயாராக இருக்கிறேன். ஒருவரின் பொய்யை நீங்கள் உண்மை என நம்புவதை எடுத்துச் சொல்கிறேன். தற்போது நடக்கும் எதற்கும் நான் காரணியாக இருந்தால் தயவு செய்து என்னை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லுங்கள். அதை சரியான முறையில் செய்யுங்கள். ரொம்ப நல்ல குடும்பத்தில் இருந்து வந்த பெண் நான். என் பக்க உண்மையை மட்டும் ஏன் யாருமே பார்ப்பது இல்லை?
உங்களின் சாபம், பாடி ஷேமிங், திட்டு, பொய்யான குற்றச்சாட்டு மற்றும் கொலை மிரட்டல்களால் எனக்கு என்ன நடக்கிறது என யாராவது யோசிக்கிறீங்களா? என்னை கர்மா காயப்படுத்தும் என்கிறீர்கள். உண்மை சட்டப்படி வெளியே வரும்போது உங்களுக்கு எல்லாம் நடக்கப் போவதை நான் பார்க்க விரும்பவில்லை. நெகட்டிவ் விஷயங்களை வைத்து கமெண்ட் செய்வதுடன் வெறுப்பை பரப்பும் உங்கள் அனைவரையும் நான் சிவன், யேசு, சாய் பாபா, காளி மா, அன்னை மேரி, புனித அந்தோனி, நீம் கரோலி பாபா, விநாயகர், அனுமான், முருகன், துர்கா மா, லக்ஷ்மி மா மற்றும் என் மூதாதையர்களிடம் விட்டு விடுகிறேன். தயவு செய்து என் அழுகையை கேட்டு உதவி செய்ய வாங்க என கூறியுள்ளார்.
The post நடிகர் ரவி மோகன் விவாகரத்துக்கு நான் காரணமா?.. என்னை கோர்ட்டுக்கு இழுத்து செல்லுங்க: பாடகி கெனிஷா ஆவேசம் appeared first on Dinakaran.