நடிகர் ரஜினிகாந்த் உடன் சீமான் திடீர் சந்திப்பு

7 months ago 24

சென்னை,

நடிகர் ரஜினிகாந்தை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று சந்தித்தார்.

சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்தின் இல்லத்தில் அவரை சீமான் சந்தித்தார்.

தனது பிறந்தநாளன்று நடிகர் ரஜினிகாந்தை சந்திக்க சீமான் நேரம் கேட்டிருந்தார். ஆனால், அன்றைய தினம் படப்பிடிப்பு காரணமாக சந்திக்க முடியவில்லை. இதையடுத்து, நடிகர் ரஜினிகாந்தை சீமான் இன்று சந்தித்துள்ளார்.

இந்த திடீர் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேவேளை, இந்த சந்திப்பின்போது அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. 

Read Entire Article