
கேரள திரையுலகில் உச்சம் தொட்ட நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் மம்முட்டி . இதுவரை ஏராளமான சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ள இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் 'டோமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்'. கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கிய இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் நடிகர் மம்மூட்டி, கவுதம் மேனன் இணைந்து நடித்துள்ள புதிய படமான 'பசூகா' வருகிற ஏப்ரல் 10 அன்று வெளியாகவுள்ளது.
ஒரு வருடத்துக்கு 5 படம் என நடித்து வரும் மம்முட்டி, திடீரென நடிப்பில் இருந்து பிரேக் எடுத்துள்ளார் எனத் தகவல் வெளியாக, அவருக்கு உடல்நிலை சரியில்லை என்றும் அவருக்கு புற்றுநோய் உறுதியாகியுள்ளதாகவும் நேற்று வலைதளங்களில் தகவல் பரவியது. இந்த தகவல்களுக்கு மம்முட்டியின் செய்தி தொடர்பாளர் மறுப்பு தெரிவித்திருக்கிறார்.

மம்முட்டியின் செய்தி தொடர்பாளர், "இது பொய்யான செய்தி. அவர் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு நோன்பு இருப்பதால்தான் விடுப்பு எடுத்திருக்கிறார். அதனால்தான் படப்பிடிப்புகளிலிருந்து ஒரு இடைவெளியும் எடுத்திருக்கிறார். இந்த இடைவெளிக்குப் பிறகு இயக்குநர் மகேஷ் நாராயணன் இயக்கும் படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்கவிருக்கிறார்" எனக் கூறி பரவி வந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.