திருப்பதி கோவிலில் ஜூன் மாத தரிசன டிக்கெட் பெற நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

3 hours ago 3

திருப்பதி,

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நாடு முழுவதும் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். குறிப்பாக விசேஷ நாட்களில் திருப்பதிக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படும்.

இந்த நிலையில், திருப்பதி கோவிலில் ஜூன் மாதம் நடைபெறும் சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை மற்றும் அஷ்டதல பாத பத்மாராதனை உள்ளிட்ட சேவைகளுக்கான டிக்கெட் பெற மார்ச் 18-ந்தேதி(நாளை) காலை 10 மணி முதல் 20-ந்தேதி காலை 10 மணி வரை ttdevasthanams.ap.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Read Entire Article