சென்னை: இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் நேற்று மாலை மாரடைப்பு காரணமாக காலமானார். அவரது உடல் அஞ்சலிக்காக சென்னை நீலாங்கரையில் உள்ள இயக்குநர் பாரதிராஜாவின் வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. மனோஜ் உடலுக்கு திரையுலகினர், அரசியல் கட்சித்தலைவர்கள் என பலதரப்பினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அதிமுக, தேமுதிக, பாஜக, நாதக என பல்வேறு கட்சியை சேர்ந்த நிர்வாகிகள், தலைவர்கள் என பலரும் நேற்று முதல் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நடிகரும், தவெக தலைவருமான விஜய், சூர்யா, வைரமுத்து, மதன்கார்க்கி, மன்சூர் அலிகான், தம்பி ராமையா உள்ளிட்ட பல திரை பிரபலங்களும் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் மனோஜ் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர். தனது மகனை இழந்து வாடும் இயக்குநர் பாரதிராஜாவிற்கும், மனோஜ் குடும்பத்தாருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்தார்.
The post நடிகர் மனோஜ் பாரதிராஜா உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி appeared first on Dinakaran.