நடிகர் மணிகண்டன் நடிக்கும் 'குடும்பஸ்தன்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

3 months ago 30

சென்னை,

'காதலும் கடந்து போகும்', 'காலா', 'விக்ரம் வேதா' போன்ற பல படங்களில் முன்னணி நடிகராக நடித்தவர் மணிகண்டன். 'ஜெய் பீம்' திரைப்படத்தில் அவருடைய நடிப்பின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தார். அறிமுக இயக்குநர் பிரபுராம் வியாஸ் இயக்கத்தில் நடிகர் மணிகண்டன் நடித்த 'லவ்வர்' படம் வெளியானது. இளைய தலைமுறையிடம் வரவேற்பைப் பெற்று வசூல் ரீதியான வெற்றிப்படமாக அமைந்தது. இவர் நடிகராக மட்டுமல்லாமல் பல திரைப்படங்களுக்கு கதை, வசனமும் எழுதியுள்ளார். நடிகர் மணிகண்டன் 'நரை எழுதும் சுயசரிதம்' என்ற திரைப்படத்தை இயக்கியும் உள்ளார். நடிகர் மணிகண்டன் 'தி கோட்' படத்தில் விஜயகாந்துக்கு டப்பிங் பேசியுள்ளார்.

தற்போது, 'நித்தம் ஒரு வானம்' படத்தின் தயாரிப்பு நிறுவனமான சினிமாக்காரன் தயாரிப்பில் புதிய படத்தில் நடிக்கிறார். இந்த படத்தினை நக்கலைட்ஸ் யூட்யூப் இயக்குனர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கியிருக்கிறார். இந்த படத்திற்கு 'குடும்பஸ்தன்' என பெயரிடப்பட்டுள்ளது. இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சிம்பு வெளியிட்டுள்ளார். 

Elated to launch the interesting first look poster of #Kudumbasthan. Another entertaining film on the way from @manikabali87, best wishes to the entire team @Cinemakaaranoff @saanvemegghana @vinoth_offl @gurusoms @DirRajeshwark @prasannaba80053 @VaisaghOfficialpic.twitter.com/QrETzZoCHS

— Silambarasan TR (@SilambarasanTR_) September 28, 2024
Read Entire Article